வாட்டி வதைக்கும் வெயில் நேரத்தில் அடிக்கடி மின்சார நிறுத்தம்; பங்ளாதே‌‌ஷ் மக்கள் கவலை

வாட்டி வதைக்கும் வெயில் நேரத்தில் அடிக்கடி மின்சார நிறுத்தம்; பங்ளாதே‌‌ஷ் மக்கள் கவலை

1 mins read
4c288e0f-b0dc-4885-827c-2e6620d9d67f
படம்: இபிஏ -
Google News Preferred Icon

பங்ளாதே‌ஷில் தற்போது வெயில் கடுமையாக உள்ளது.

அதனால் அந்நாட்டில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு இவ்வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் அதிகமாக உள்ள நேரத்தில் அங்கு அடிக்கடி மின்சாரம் தடைசெய்யப்படுகிறது. அதனால் மக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

வரும் நாள்களில் வானிலை மேலும் மோசமாகலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளதால் மக்கள் செய்வது அறியாது தவிக்கின்றனர்.

அந்நாட்டில் பத்து நாள்களுக்கு முன்னர் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசாக இருந்தது, ஆனால் இப்போது அது 41 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளது.

இனி 2 வாரங்களுக்கு மின்சார விநியோகத்தில் தடங்கல் இருக்கும், உலக அளவில் நிலவும் எரிசக்தி பற்றாக்குறை அதற்கு காரணம் என்று பங்ளாதே‌ஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆடை ஏற்றுமதி அதிகம் செய்யும் பங்ளாதே‌‌ஷுக்கு இது மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.

கோடைகாலத்தில் வெப்ப அலை அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்