சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) வடக்கு குவீன்ஸ்லாந்தில் ஒருவர் மாண்டார்.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மழை மற்றும் வெள்ளம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஹின்சின்புருக் ஷையர், ஜிரு ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வடக்கு குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் 600 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. மேலும் அப்பகுதிகளில் மழை தீவிரமடையலாம் என்று வானிலை ஆய்வக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகளின் அறிவிப்பை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன.

