தென்கொரியாவில் கனமழை: 1,500 பேர் வெளியேற்றம், வீடுகள் சேதம்

தென்கொரியாவில் கனமழை: 1,500 பேர் வெளியேற்றம், வீடுகள் சேதம்

படம்: ஏஎஃப்பி

23 Sep 2024 - 9:39 am

1 mins read

சோல்: தென்கொரியாவில் மூன்று நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்ததில் 1,500 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கனமழை காரணமாக வீடுகள், சாலைகள், உள்கட்டமைப்பு ஆகியவை சேதமடைந்தன.

செப்டம்பர் 19ஆம் தேதி பிற்பகலிலிருந்து செப்டம்பர் 21ஆம் தேதி வரை கனமழை பெய்தது.

முதலில் ஜீஜு தீவிலும் தென்கடலோரப் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது.

பிறகு நாடெங்கும் அடைமழை பெய்தது.

செப்டம்பர் 22ஆம் தேதி காலை நிலவரப்படி 1,014 குடும்பங்களைச் சேர்ந்த 1,501 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தென்கொரியாவின் மத்திய பேரிடர், பாதுதாப்பு நடவடிக்கைப் பிரிவின் தலைமையகம் கூறியது.

இவர்களில் 682 பேரால் தங்கள் சொந்த வீடுகளுக்கு இன்னும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்காலிகப் புகலிடங்களில் அல்லது உறவினர்களின் வீடுகளில் தங்குவதாகவும் அதிராரிகள் தெரிவித்தனர்.

கனமழை காரணமாகப் பல சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது,

பூசான் நகரில் நிலம் உள்வாங்கி ஆழ்குழி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளம் காரணமாக ஏறத்தாழ 4,116 ஹெக்டர் பரப்பளவு பயிர்கள் நாசமாகின.

இந்நிலையில், கனமழை எச்சரிக்கை செப்டம்பர் 22ஆம் தேதி காலை மீட்டுக்கொள்ளப்பட்டது.

குறிப்புச் சொற்கள்