சரவாக்கில் ஹெலிகாப்டர் விபத்து; ஐவர் மரணம்

சரவாக்கில் ஹெலிகாப்டர் விபத்து; ஐவர் மரணம்

படம்: ஓராங் அவாம்

09 Sep 2026 - 10:37 am

1 mins read

கூச்சிங்: மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த ஐவரும் கொல்லப்பட்டனர்.

அச்சம்பவம் வட சரவாக்கின் மாரூடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) லோ லெல்லாங் ‘எஸ்டிஓஎல்போர்ட்’ எனப்படும் நீளம் குறைவான ஓடுபாதை உள்ள விமான நிலையத்துக்கு அருகே நிகழ்ந்தது. ரேலா லெலாங்கின் ஓடுபாதைக்கு அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக மிரி விமான நிலைய தீயணைப்பு, மீட்புச் சேவைப் பிரிவுக்குக் கிடைத்த முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் 9M-LLF என்ற பதிவு எண்ணைக் கொண்ட பிஓ-105 வகை ஹெலிகாப்டர் என்று மலேசிய சிவில் விமானத்துறை ஆணையம் தெரிவித்தது. சம்பவம் குறித்து விமானத் தகவல் சேவையிடமிருந்து செவ்வாய்க்கிழமை 3.58 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் அது குறிப்பிட்டது.

மலேசிய சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது, அந்த ஹெலிகாப்டரில் அமைச்சைச் சேர்ந்த நால்வரும் விமானி ஒருவரும் இருந்ததாகத் தெரிவித்தார். அவர்கள், ஒதுக்குப்புறமான பகுதிகளில் வசிக்கும் சமூகங்களுக்கு சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் ‘பிளையிங் டாக்டர் சர்விஸ் பிரோகிராம்’ திட்டத்தில் இடம்பெற்றவர்கள்.

குறிப்புச் சொற்கள்