தனி ஆளாகப் பள்ளியை வழிநடத்தும் ஆசிரியர்

1 mins read
d2861147-94e8-4df5-a364-ed7bdfd32106
படம்: சமூகஊடகம் -

கிரிட் சோம்ப்ரா என்னும் 34 வயது ஆசிரியர் 20 மாணவர்கள் கொண்ட தொடக்கநிலைப் பள்ளியைத் தனியாளாக நடத்தி வருகிறார்.

சமைப்பது, கணக்கு வழக்கு, வளாகத்தை சுத்தம் செய்வது, தோட்டத்தைப் பார்த்துக்கொள்வது என பள்ளி சார்ந்த அனைத்து வேலைகளையும் ஒரே ஆளாகப் பார்த்துவருகிறார் அவர்.

பள்ளியில் அவர் ஒருவர் மட்டுமே வேலை செய்வதால் பல பாடங்களையும் அவரே நடத்துகிறார்.

பள்ளி தாய்லாந்தின் பனோம் சராகாம் மாவட்டத்தில் உள்ளது.

2019ஆம் ஆண்டு முதல் தனியாளாகப் போராடும் அவருக்கு விரைவில் சில உதவிகளையும் ஆசிரியர்களையும் அனுப்பிவைக்கவுள்ளதாகத் தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சமையல்காரரை பணியமர்த்த போதிய பணம் இல்லாததால் தாமே சமைத்து மாணவர்களுக்கு உணவு தருவதாக கிரிட் கூறினார்.

தற்போது பள்ளியில் ஆறிலிருந்து 12 வயதுவரை உள்ள மாணவர்கள் படிப்பதாகவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகுப்பில் உள்ளதால் நேரத்தைப் பிரித்து வகுப்பு எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

பள்ளியில் ஒரே ஒரு கணினி மட்டுமே உள்ளதால் மற்றொரு கணினி இருந்தால் மாணவர்கள் நன்கு கற்றுக்கொள்வார்கள் என்று கிரிட் குறிப்பிட்டார்.

மாணவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் வருகிறார்கள், அவர்களுக்கு கல்விகற்றுத் தருவது மகிழ்ச்சி தருகிறது.

மாணவர்களின் படிப்புகளுக்கு அவ்வப்போது உள்ளூர் சமூகத்தில் இருந்து நன்கொடைகள் வருவதால் நிலைமையைச் சமாளிக்க முடிவதாக கிரிட் கூறினார்.

மாணவர்கள் தொடக்கநிலை கல்வியுடன் நிறுத்திவிடாமல் மேலும் படிக்க வேண்டும் என்பதே தமது ஆசை என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்