பெர்லின்: இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியின் சர்வாதிகாரியும் ‘நாஸி’ அமைப்பை வழிநடத்தியவருமான அடொல்ஃப் ஹிட்லர் உட்பட்ட சக ராணுவ அதிகாரிகள் ஓய்வு எடுக்க விரும்பிச் செல்லும் மலை உச்சியில் அமைந்த மாளிகை பவாரியா பகுதியில் அமைந்துள்ளது.
அதனை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) தீயிட்டுக் கொளுத்திய சந்தேகத்தில் ஆடவர் ஒருவர் ஜெர்மனியின் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கழுகுக் கூண்டு என்று வழங்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாளிகை தீயில் எரிந்தபோது அந்த சந்தேக நபர் அதனருகில் நடமாடிக்கொண்டிருந்ததாகக் காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.
அவசரகால அதிகாரிகளுடன் ஏறத்தாழ 200 தீயணைப்பு வீரர்கள் பவாரியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள அந்த மாளிகையில் தீயை அணைக்கப் போராடினர்.
‘கீல்ஸ்டைன்ஹவுஸ்’ என்ற அழைக்கப்படும் அந்த மாளிகை ‘பேர்செஸ்கடன்’ என்ற மலைப்பகுதியில் உள்ளது. கைது செய்யப்பட்ட ஆடவருக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் தீப்பிடித்த காரணத்தையும் விசாரித்து வருவதாக காவல்துறை கூறியது.
அல்பைன் மலைத்தொடரின் இயற்கை எழில் சூழ்ந்த அக்கட்டடம் 1938ஆம் ஆண்டில் நாஸி அதிகாரிகளுக்கும் அவர்களது விருந்தினர்களுக்கும் தனிப்பட்ட வகையில் கட்டப்பட்டது.
பவாரியா மாநிலம் அதனை நாஸி காலத்தின் நினைவுச் சின்னமாக அறிவித்திருந்தது.
