ஹோர்முஸ் அமைதி வாய்ப்பு:எண்ணெய் விலை குறைந்ததோடு பங்குச் சந்தை மீட்சி

ஹோர்முஸ் அமைதி வாய்ப்பு:எண்ணெய் விலை குறைந்ததோடு பங்குச் சந்தை மீட்சி

2 mins read
0ff338c3-eef3-4431-a1b8-f492e68a2df0
அமெரிக்க டெக்சஸ் மாநிலத்தில் இயங்கும் எண்ணெய் தோண்டும் இயந்திரம். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹாங்காங்: மத்திய கிழக்குப் போர் முடிவுக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை வர்த்தகத்துக்கு மீண்டும் திறக்கும் என்ற நம்பிக்கையில் புதன்கிழமை (மே 6) உலக அளவில் எண்ணெய் விலை சரிந்து, பங்குச் சந்தைகள் எழுச்சியடைந்தன.

நீரிணையில் சண்டை நிறுத்தம் நடப்பில் இருந்த நிலையில் அமெரிக்கா, அங்கு சிக்கியிருந்த கப்பல்களைப் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் திட்டத்தை திங்கட்கிழமை (மே 4) தொடங்கியது.

அதற்குப் பதிலடியாக ஈரான் அமெரிக்க இலக்குகள் மீதான அதன் தாக்குதலை மீண்டும் ஆரம்பித்தது. அதேவேளை, அமைதி ஒப்பந்தத்துக்கான வாய்ப்பை கருத்தில்கொண்டு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஒரு நாள் நடப்பில் இருந்த நீரிணை பாதுகாப்புத் திட்டத்தை நிறுத்திவைத்தார்.

இருப்பினும் ஈரான் துறைமுகங்களுக்கான தடை தொடரும் எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

கப்பல்களைப் பாதுகாப்பாக நீரிணையைக் கடந்து செல்ல உதவும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்திவைத்ததை முதலீட்டாளர்கள் வரவேற்றனர்.

மேலும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர், ஈரான்மீது இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ‘ஆப்பரேஷன் எபிக் ஃபியுரி’ என்ற தாக்குதல் நடவடிக்கை அதன் இலக்கை எட்டிவிட்டதால், அது முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். அது நடந்த சில மணி நேரங்களில் அமைதி ஒப்பந்தத்துக்கான வாய்ப்புகள் குறித்த செய்தி வெளியிடப்பட்டது.

எண்ணெய் விலையும் பங்குச் சந்தையும்

மத்திய கிழக்கில் அமைதி ஏற்படும் என்ற எதிர்பார்ப்போடு செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் (மே 5 & மே 6) அமெரிக்க எண்ணெய் உற்பத்தி நிறுவனமான வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மிடியட்டின் விலை 4 விழுக்காடு சரிந்து, ஒரு பீப்பாய்க்கு S$127 (US$100 ) என்ற நிலையை அடைந்தது.

எண்ணெய் விலைக் குறைந்ததால், அமெரிக்காவின் பிரதான பங்குச் சந்தைக் குறியீடுகளான எஸ்&பி 500, நாஸ்டக் ஆகியன நல்ல முதலீடுகளைப் பெற்றன. அதே நிலை ஹாங்காங், ஷங்காய், சிட்னி, வெல்லிங்டன், தைப்பே, மணிலா, ஜக்கார்த்தா ஆகிய பங்குச் சந்தைகளிலும் லாபகரமான பரிவர்த்தனைகளுக்கு வித்திட்டது.

குறிப்புச் சொற்கள்