டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப்போவதில்லை என்று ஈரான் புதன்கிழமை (ஏப்ரல் 22) சூளுரைத்துள்ளது.
போர் நிறுத்த உடன்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளபோதும் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடர்வதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் சொன்னது.
அமெரிக்க முற்றுகைக்கு மத்தியில் ஈரான் சரக்குக் கப்பல்களை கைப்பற்றியது
இந்நிலையில், நீரிணை வழியாகக் கடந்துசெல்ல முற்பட்ட இரண்டு சரக்குக் கப்பல்களையும் ஈரான் கைப்பற்றியிருப்பதை உறுதிப்படுத்தியது.
போரை நிறுத்த ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு காலாவதியாவதற்குச் சில மணிநேரம் எஞ்சியிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏப்ரல் 21ஆம் தேதி காலவரையறையின்றி உடன்பாட்டை நீட்டிப்பதாக அறிவித்தார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமரசம் செய்ய பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்பதாகச் சொன்ன ஈரான், திரு டிரம்ப்பின் அறிவிப்பு பற்றி கருத்துரைக்கவில்லை.

