தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீடுகளுக்குப் பஞ்சம்; பிரிட்டிஷ் பிரதமர் புதிய நகரங்களை அமைக்க சூளுரை

1 mins read
88eb970a-ea69-477a-a54a-a6467f73a882
பிப்ரவரி 13ஆம் பக்கிங்ஷம்ஷயரில் வீட்டு கட்டுமானத் தளத்திற்கு வருகையளித்த பிரதமர் கியர் ஸ்டார்மர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டனில் வீடுகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் புதிய நகரங்களை அமைக்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் கியர் ஸ்டார்மர் சூளுரைத்துள்ளார்.

இங்கிலாந்தில் பல புதிய நகரங்கள் இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

இது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமையவிருக்கும் ஆகப்பெரிய வீடமைப்புத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

நாட்ஸி ஜெர்மனியின் தோல்வியைத் தொடர்ந்து 1940களின் பிற்பகுதியில் வீட்டுப் பற்றாக்குறையைப் போக்க புதிய நகர்ப்புறங்களை தொழிற்கட்சி அரசாங்கம் உருவாக்கியது.

அதன் பிறகு முதல் முறையாக ஆகப்பெரிய அளவில் வீடமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குள் 1.5 மில்லியன் வீடுகளைக் கட்ட அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பெரும்பாலும் ஏற்கெனவே உள்ள நகரங்கள் விரிவுபடுத்தப்படலாம் அல்லது புதிய நகரங்கள் உருவாக்கப்படலாம்.

புதிய, அடுத்த தலைமுறை புதிய நகரங்களை அமைக்கும் பணிகளும் தொடங்கும் என்று அரசாங்கம் கூறியது. அத்தகைய ஒவ்வொரு நகரத்திலும் ஏறக்குறைய 10,000 வீடுகள் இடம்பெற்று இருக்கும்.

“வீடுகளைக் கட்ட எல்லாவித வசதி, வாய்ப்புகளையும் பயன்படுத்த விரும்புகிறோம். இதனால் அதிக குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்கும்,” என்று பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார்.

விவசாயிகளின் எதிர்ப்பால் பாதிக்கப்பட்ட வீட்டு கட்டுமானத் தளத்திற்கு வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் வீட்டுத் திட்டங்களை விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்