சவூதிமீது ஹூதி தாக்குதல்; பொதுமக்களில் 11 பேர் காயம்

சவூதிமீது ஹூதி தாக்குதல்; பொதுமக்களில் 11 பேர் காயம்

1 mins read
e616bfd0-d5ea-4187-b1ed-96ba8b0f3984
ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் மற்ற ஈராக்கிய அமைப்புகள் ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள்மீது தாக்குதல் நடத்தவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்று சவூதி அரேபியா எச்சரித்துள்ளது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

ரியாத்: சவூதி அரேபியாமீது ஏமனின் ஹூதி அமைப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஹூதியுடன் ஈரானின் ஆதரவுடன் இயங்கும் மற்ற ஈராக்கிய அமைப்புகள் ஒன்றாகத் திட்டமிட்டுத் தங்கள்மீது தாக்குதல் நடத்தவிருப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் நஜ்ரான் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சவூதியைச் சேர்ந்த எழுவர், ஏமனைச் சேர்ந்த ஒருவர், எகிப்தியர்கள் இருவர், பாகிஸ்தானியர்கள் ஒருவர் காயமுற்றதாக மேஜர் ஜெனரல் துர்க்கி அல் மாலிக்கி என்ற அந்த அதிகாரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்சவூதி அரேபியாஹூதிதாக்குதல்ஈரான்ஈராக்