ஏமெனின் கரையோரங்களைக் கைப்பற்றிய ஹூதி போராளிகள்

கச்சா எண்ணெய் விலை ஏற்றமடைந்தது

ஏமெனின் கரையோரங்களைக் கைப்பற்றிய ஹூதி போராளிகள்

2 mins read
செங்கடலில் சவூதி அரேபிய எண்ணெய் ஏற்றுமதிக்கு மிரட்டல்
d15fa208-04e0-4cb4-83d4-bfc5f0c62789
ஹூதி போராளிகள் ஏமனின் சானா நகரில் தங்களுக்கு ஆதரவு திரட்ட வீதிவலம் சென்றனர். - படம்: இபிஏ
multi-img1 of 3

கைரோ/வாஷிங்டன்/துபாய்: ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹூதி போராளிகள், ஏமனின் முக்கியத் துறைமுகங்கள் உட்பட்ட அதன் தென்பகுதியின் கரையோரங்களையும் தீவுகளையும் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவரது நாட்டில் இடைத் தவணைத் தேர்தல் நவம்பரில் நிறைவடைந்ததும் ஈரானுடனான மத்திய கிழக்குப் போர் முடிவுக்கு வருவதை எதிர்பார்க்கலாம் என அறிவித்த சில மணிநேரங்களில் ஹூதிப் படைகளின் செயல்பாடு நிகழ்ந்துள்ளது.

செங்கடலில் உள்ள மொக்கா துறைமுக நகரை ஹூதிப் போராளிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து பாப் அல்-மந்தாப் நீரிணையை அவர்கள் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும் சாத்தியம் உருவெடுத்துள்ளது.

அந்த நீரிணை செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கியக் கப்பல் போக்குவரத்துப் பாதையாகும் என்று ஏமன் அரசாங்க ராணுவ அதிகாரிகள் கருத்துரைத்தனர்.

ஹூதி போராளிகள் பாப் அல்-மந்தாப் நீரிணையுடன் செங்கடலின் தென் பகுதிகளோடு ஹானிஷ் தீவுகளையும் அடைந்துள்ளதால், உலகின் முக்கியக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகரித்துள்ளதாக ஏமன் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

அரேபிய தீபகற்பத்தில் ஏற்கெனவே ஹோர்முஸ் நீரிணையை ஈரான் ஆக்கிரமித்து வருகிறது. மத்திய கிழக்கில் நிலவும் அமெரிக்காவுடனான பூசலில் தற்போது மற்றொரு புறம் உள்ள பாப் அல்-மந்தாப் நீரிணையும் வீழ்ந்தால் உலகின் இரண்டாம் முக்கிய எண்ணெய் ஏற்றுமதிப் பாதையும் பாதிக்கப்பட்டு எரிபொருள் விலைகள் விண்ணை எட்டும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, எரிபொருள் விநியோகத் தொடரில் தடைகள் எதிர்பார்க்கப்படுவதால் பிரண்ட் குறியீட்டின்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை S$133 (US$105) என ஏற்றமடைந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் ஒரு கேலன் டீசலுக்கான தேசிய சராசரி விலை முதன்முறையாக S$7.61ஐ (US$6) கடந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்