தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சில் குரங்கம்மை

1 mins read
23c0c987-4e83-4c44-9686-298aee3d3ef7
பிலிப்பீன்ஸ் ஆடவரைப் பாதித்த குரங்கம்மை எத்தகைய கிருமிவகை என்பதை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளுக்காக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

மணிலா: பிலிப்பீன்சில் ஒருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு, இதுவே பிலிப்பீன்சில் பதிவாகியிருக்கும் முதல் குரங்கம்மை பாதிப்பு. இந்தத் தகவலை பிலிப்பீன்ஸ் சுகாதாரத்துறை ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று வெளியிட்டது.

அது எத்தகைய கிருமிவகை என்பதைக் கண்டுபிடிக்க சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சோதனை முடிவுகளுக்காக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 33 வயது பிலிப்பீன்ஸ் ஆடவர், வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்