பிலிப்பீன்சை நெருங்கும் ‘யின்சிங்’ சூறாவளி

1 mins read
65b46a5f-92f5-4e67-9b60-94f735830117
அண்மையில் பிலிப்பீன்சின் பட்டன்காஸ் மாநிலத்தில் வீசிய புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டது.  - படம்: இபிஏ

மணிலா: பிலிப்பீன்சை நோக்கி யின்சிங் சூறாவளி வருவதால் அந்நாட்டு அதிகாரிகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தேவையான அளவு உணவுகளும் கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ராணுவ வீரர்கள் பலர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சூறாவளியால் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யின்சிங் சூறாவளி நவம்பர் 7ஆம் தேதி மாலை முதல் நவம்பர் 8ஆம் தேதி காலை வரை வீசக்கூடும். கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

அண்மையில் பிலிப்பீன்சின் பட்டன்காஸ் மாநிலத்தில் வீசிய புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள் மற்றோர் சூறாவளி அந்நாட்டை நெருங்குகிறது.

குறிப்புச் சொற்கள்