கால்கள் இல்லாதது போல் உணர்கிறேன்: மகாதீர்

கால்கள் இல்லாதது போல் உணர்கிறேன்: மகாதீர்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Apr 2026 - 9:50 pm

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது இந்த ஆண்டு ஜனவரி மாதம் கீழே விழுந்தார்.

காயமடைந்த நாள் குறித்து திரு மகாதீர் மலேசியாவின் வலையொளி ஒன்றில் பேசியபோது குறிப்பிட்டார். அந்தக் காணொளியும் சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

“வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது கால் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது. அதனால் கீழே விழ நேரிட்டது,” என்று அவர் கூறினார்.

“கீழே விழுந்ததால் திரு மகாதீருக்கு இடுப்பு எலும்பிலும் மூட்டிலும் தலையிலும் அடிபட்டது. கடுமையான வலி இருந்தது. வலியைக் குறைப்பதில் மருத்துவர்களும் சிரமத்தை எதிர்கொண்டனர்,” என்றார் அவர்.

“சில நாள்களுக்குப் பிறகே வலி குறைந்தது. தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளேன். நிற்க முடிகிறது. ஆனால் என்னுடைய கால் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. கால்கள் இல்லாததுபோல் உணர்கிறேன்,” என்றார் திரு மகாதீர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி திரு மகாதீர் 100 வயதைக் கடந்தார்.

குறிப்புச் சொற்கள்
மகாதீர்மலேசியாவயது