காணொளித் தொகுப்பு தொடர்பாக பிபிசிக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்: டிரம்ப்

காணொளித் தொகுப்பு தொடர்பாக பிபிசிக்கு எதிராக வழக்கு தொடுப்பேன்: டிரம்ப்

படம்:ஏஎஃப்பி

15 Nov 2025 - 10:09 pm

1 mins read

ஏர்ஃபோர்ஸ் ஒன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உரையைக் காட்டும் காணொளி தொகுக்கப்பட்ட விதம் குறித்து பிபிசி செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

காணொளி தொகுக்கப்பட்ட விதம் அதிபர் டிரம்ப்பின் உரையைத் தவறாகச் சித்திரிக்கும் வகையில் இருப்பதை அது ஒப்புக்கொண்டது.

ஆனால் அதற்காக இழப்பீடு கொடுக்கப்போவதில்லை என்று அது கூறியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$6.4 பில்லியன்) வரையிலான இழப்பீடு கேட்டு பிபிசி செய்தி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்துக்கு முன்பு அதிபர் டிரம்ப் பேசியதைக் காட்டும் காணொளியைப் பயன்படுத்தி அவருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக பிபிசிக்கு அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் நவம்பர் 10ஆம் தேதியன்று அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்டு இழப்பீடு வழங்க பிபிசிக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்