தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2021க்குப் பிறகு 12வது முறை குமுறிய ஐஸ்லாந்து எரிமலை

1 mins read
fd5fffb6-eeb7-4364-9f17-b1a08090e679
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தின் பரப்பளவைக் கொண்ட ஐஸ்லாந்தில் 30க்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

கோப்பன்ஹேகன்: ஐஸ்லாந்தின் தென்மேற்கு வட்டாரத்தில் எரிமலை ஒன்று வெடித்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வகம் ஜூலை 16ஆம் தேதி தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் அங்கு நிகழ்ந்துவரும் எரிமலைச் சம்பவங்களில் இது ஆக அண்மையானது.

பனிப்பாறைகளும் எரிமலைகளும் நிறைந்த ஐஸ்லாந்தின் ரெய்க்யனஸ் தீபகற்பத்தில் 2021ஆம் ஆண்டு புவியியல் கட்டமைப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதிலிருந்து பல எரிமலைச் சம்பவங்கள் பதிவாகின.

அண்மையில் ஏற்படும் எரிமலை வெடிப்புகள் ‘பிளவு வெடிப்புகள்’ என்று அழைக்கப்படுகின்றன. எரிமலையின் நடுவிலிருந்து குழம்பு வான் நோக்கி வெளிவருவதற்குப் பதிலாக பூமியின் மேல் ஓட்டில் உள்ள நீண்ட வெடிப்புகள் வழி எரிமலைக் குழம்பு வெளியாகிறது.

ரெய்க்யனஸ் தீபகற்பத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் தலைநகர் ரெய்கவிக்கிற்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லை. விமானப் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் சாம்பலும் வெளியேறவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தின் பரப்பளவைக் கொண்ட ஐஸ்லாந்தில் 400,000க்கும் குறைவான குடியிருப்பாளர்கள் உள்ளனர். அங்கு 30க்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்