வாஷிங்டன்: ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராக அந்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க ஈரானிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதில் குறைந்தது 734 பேர் மாண்டுவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மாண்டோரில் ஈரானிய அதிகாரிகளும் அடங்குவர் என்று ஈரானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராகப் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக அது குற்றம் சாட்டியது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தை முடக்க அதில் ஈடுபட்டோரை ஈரான் தூக்கிலிட்டால் அந்நாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவி வழங்கும் என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். இதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஈரானில் மரண எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டத்தை முடக்க ஈரான் மரண தண்டனையைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஆர்ப்பாட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிலர் மீது ‘இறைவனுக்கு எதிராகப் போர் தொடுத்தல்’ குற்றம் சுமத்தப்படும் என்று ஈரானிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

