கோலாலம்பூர்: மோசமான வானிலையால் பற்றாக்குறை ஏற்பட்டு தேங்காய் விலை உலக முழுவதும் அதிகரித்துள்ளது.
தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டு விநியோகம் சுருங்கிவிட்டது. சில இடங்களில் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா போன்ற நாடுகள் தேங்காய் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. வாடிக்கையாளர்களும் மாற்றுவழிகளைக் கண்டறிய வலியுறுத்தப்படுகிறது. வேகன் பால் அல்லது ஆற்றல் பானம் போன்றவை தேங்காய்ப் பாலுக்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
உலகில் ஆகப்பெரிய தேங்காய் உற்பத்தி நாடான பிலிப்பீன்சில் 2025ஆம் ஆண்டில் 20 விழுக்காடு உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நாட்டில் நிலவும் மோசமான வானிலையே அதற்குக் காரணம். வறண்ட பருவம் முதல் பருவகால புயல் வரை பிலிப்பீன்சை வாட்டி வருகிறது.
“பருவமாற்றமே குறைவான தேங்காய் விநியோகத்துக்கு முக்கிய காரணம்,” என்று ஆக்ஸிலம் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைவர் ஹென்றி ராபேரோகா மின்அஞ்சல் வழியாகச் சொன்னார்.
இதனால் உற்பத்தி குறைந்தது, அறுவை தாமதமானது என்றார் அவர்.
தேங்காய் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளிலும் மோசமான வானிலையால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தேங்காய் உற்பத்தியில் உலகில் 2வது இடத்தில் இருக்கும் இந்தோனீசியாவில் அந்நாட்டின் தொழில்துறை அமைச்சு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்றுமதிக்குத் தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது. உள்ளூரில் தேங்காய் விலை 150 மடங்கு அதிகரித்ததால் விலையை மட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
தொடர்புடைய செய்திகள்
மோசமான வானிலையால் தேங்காய் விளைச்சல் குறைந்து, இலங்கைத் தலைநகரில் கொழும்பிலும் கடந்த ஆண்டு விலை இருமடங்கிற்கு மேலாக அதிகரித்தது. இந்நிலையில் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் குறைக்க தேங்காய்களை இறக்குமதி செய்ய உற்பத்தியாளர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் பிப்ரவரியில் ஏற்றுக்கொண்டது.
“புதிய தேங்காய் பால் போதுமான அளவு கிடைக்கவில்லை,” என்றார் 45 வயது உணவக நிர்வாகி தெரிவித்தார்.
அதிக உணவு வகைகளையும் அவரால் செய்ய முடியவில்லை.
ஆறு பொட்டலங்களுக்குப் பதிலாக மூன்று பொட்டலம் மட்டுமே வாங்குவதால் போதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

