ஹூஸ்டன்: ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசியாவிற்கான அமெரிக்காவின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஏப்ரலில் அதிகரித்தது.
எல்எஸ்இஜி என்ற நிதி நிறுவனத்தின் முதற்கட்ட கப்பல் கண்காணிப்புத் தரவுகள் இதனை காட்டுகின்றன.
அமெரிக்காவின் எரிபொருள் ஏற்றுமதியில் கால் பங்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும்.
இது, பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய எரிவாயு விநியோக நெருக்கடி ஆகியவற்றுக்கு இடையே ஒரு மாற்று விநியோகிப்பாளராக அமெரிக்காவின் பங்கு வளர்ந்து வருகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதலை தொடங்கியதிலிருந்து ஆசியாவிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 175 விழுக்காடு கூடியது.
பிப்ரவரியில் 970,000 டன்னாக இருந்த எரிபொருள் ஏற்றுமதி மார்ச்சில் 1.99 மில்லியன் டன்னாகவும் ஏப்ரலில் 2.71 டன்னாகவும் அதிகரித்தது.
அமெரிக்காவின் ஆசிய எரிபொருள் ஏற்றுமதி அதிகரித்தபோதும் அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதி குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அது, மார்ச் மாத உச்சமான 11.7 மெட்ரிக் டன்னிலிருந்து ஏப்ரலில் 10.97 மெரிக் டன்னாக குறைந்தது. அமெரிக்கா, அதன் முதல் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியை ஏப்ரலில் கோல்டன் பாஸ் முனையம் வழியாகத் தொடங்கியது. பெல்ஜியத்திற்கு இந்த எரிபொருள் அனுப்பிவைக்கப்பட்டது.

