புதுடெல்லி: ஆசியாவில் அரிசி விலை மேலும் குறையலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரிசி விளைச்சல் அதிகரித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் அரிசி இறக்குமதி அதிகமாக இருக்கும். அதுவும் தற்போது குறைந்துள்ளது அரிசி விலையை வீழ்ச்சியடைய வைத்துள்ளது.
உள்ளூர் விவசாயிகள் நெல் உற்பத்தியில் கவனம் செலுத்த இந்திய அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
விலை குறைவாக இருப்பதால் சில இறக்குமதியாளர்கள் மூன்று முதல் ஐந்து மாதங்களுக்குத் தேவையான அரிசியைக் கிடங்குகளில் சேமித்து வைத்து வருகின்றனர். இது குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கிறது.
தற்போது சந்தையில் தேவையைவிட அதிகமாக அரிசி இருப்பதால் வட்டார அளவில் விலைச் சரிவு இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஆசியாவில் அரிசி விலை குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். இருப்பினும், தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள் விலைக் குறைவால் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் அதிகமாக அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் பிலிப்பீன்சும் அரிசி இறக்குமதியை 2026 ஏப்ரல் வரை நிறுத்தியுள்ளது. உள்ளூர் விவசாயிகள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

