இந்தியா-சீனா உறவில் பதற்றம் அதிகரிப்பு

இந்தியாவின் பத்திரிகையாளர்களை சீனா வெளியேற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியாவும் சீனப் பத்திரிகையாளர்களை வெளியேற்றியது. 

இந்த வெளியேற்றங்களுக்குப் பிறகு, குறிப்பாக அண்மைய வாரங்களாக இரு நாட்டு உறவில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

நிலைமை தொடர்ந்தால் இரு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட சீன, இந்தியப் பத்திரிகையாளர்கள் அறவே இல்லாத நிலை ஏற்படும் என்றும் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் அரச தந்திரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எல்லைப் பிரச்சினையால் பதற்றம் தொடரும் நிலையிலும் புவிசார் அரசியல் போட்டி அதிகரித்து வரும் நிலையிலும் சீனாவும் இந்தியாவும் ஒன்றையொன்று தொடர்புகொள்வதில் சிக்கல் எழலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

லடாக்கில் எழுந்த எல்லைப் பூசலைத் தொடர்ந்து 2020 மே மாதம் இருநாட்டு ராணுவமும் மோதிக்கொண்டதில் இருந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் தொடர்கிறது.

இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களுக்கு சிறப்பு பேட்டியளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 2020 மே மாதம் சீனா இருநாட்டு எல்லை தொடர்பான ஒப்பந்தங்களை மீறி, எல்லைக்கு அருகே அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை நிறுத்தியது முதல் பூசல் நீடிப்பதாகக் குறிப்பிட்டார்.

அந்தச் சம்பவம் நிகழ்ந்தது முதல் இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளின் பத்திரிகையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வந்தன. அண்மைய வாரங்களாக அந்த எண்ணிக்கை அதிகமானது. 

கிட்டத்தட்ட அந்தந்த நாட்டின் எல்லாப் பத்திரிகையாளர்களையும் வெளியேற்ற இந்தியாவும் சீனாவும் நடவடிக்கை எடுத்தன.

ஏராளமான சீன பத்திரிகை யாளர்களின் விசாவைப் புதுப்பிக்க இந்தியா மறுத்தது. அதன் விளைவாக, 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் 10 முதல் 15 வரையிலான சீன செய்தியாளர்கள் இந்தியாவில் இருந்த நிலை மாறி தற்போது ஒரே ஒரு செய்தியாளர் உள்ளார்.

சீனாவும் பதிலுக்குப் பதில் நடவடிக்கை எடுத்ததால் அங்கும் ஒரே ஓர் இந்திய செய்தியாளர் தற்போது உள்ளார்.

சீனாவின் போக்கு குறித்து விமர்சித்த திரு ஜெய்சங்கர், மோடியின் ஒன்பது ஆண்டு கால அரசாங்கத்தில் உலகின் அதிகார மையமாகத் திகழும் பெரும்பாலான நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவு மேம்பட்டுள்ள நிலையில் சீனாவுடனான உறவில் மட்டும் முன்னேற்றமில்லை என்றார்.

எல்லை அருகே ராணுவத்தை நிலைநிறுத்தி தனது வலிமையைக் காட்ட சீனா தொடர்ந்து முயன்று வருவதும் இதற்கு ஒரு காரணம் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!