ஜகார்த்தா: போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மேரி ஜேன் வெலோசோவை பிலிப்பீன்சுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஜகார்த்தா முன்மொழிந்த இடமாற்ற நடைமுறைகளுக்கு பிலிப்பீன்ஸ் ஒப்புக்கொண்டதாக இந்தோனீசியா தெரிவித்துள்ளது.
இந்தோனீசிய சட்டம், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் யுஸ்ரில் இஹ்ஸா மகேந்திரா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதனைத் தெரிவித்தார்.
பிலீப்பீன்சும் இந்தோனீசியாவும் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் மேரி கிறிஸ்துமசுக்கு முன் தனது சொந்த நாட்டிற்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.
2010 ஆம் ஆண்டு யோக்யகார்த்தாவில் அவரது பயணப்பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட 2.6 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் கைதானார்
வீட்டுப் பணிப்பெண்ணும் இரண்டு பிள்ளைகளின் தாயுமான வெலோசோவை நாடு கடத்த நவம்பர் மாதம் இந்தோனீசாயா ஒப்புக்கொண்டது. 2015 இல் மரணதண்டனையிலிருந்து அவர் கடைசி நிமிட விலக்கு பெற்றார்.