இரண்டாவது அரியவகை காண்டாமிருகக் குட்டியை வரவேற்கும் இந்தோனீசியா

இரண்டாவது அரியவகை காண்டாமிருகக் குட்டியை வரவேற்கும் இந்தோனீசியா

1 mins read
3c6af4c3-f88a-45ec-a2ed-26206144dbd7
இந்தோனீசியாவின் சுமத்ராவில் உள்ள காம்பாஸ் தேசிய பூங்காவில் காண்டாமிருகக் குட்டி பிறந்தது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சுமத்ரா: மேற்கு இந்தோனீசியாவில் சுமத்ரா காண்டாமிருகக் குட்டி பிறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தகைய அரியவகை விலங்குகளின் எண்ணிக்கை உலகில் 80க்கும் குறைவு என்று நம்பப்படுவதாக அவர்கள் கூறினர்.

கடந்த வார இறுதியில் சுமத்ராவில் உள்ள காம்பாஸ் தேசிய பூங்காவில் 25 கிலோ எடை கொண்ட ஆண் காண்டாமிருகக் குட்டியை ஈன்றெடுத்தது ‘டிலைலா’ எனும் காண்டாமிருகம். ‘ஹாராப்பான்‘ என்ற காண்டாமிருகம், அக்குட்டியின் தந்தை என்று தெரிவிக்கப்பட்டது.

பூங்காவில் வனவிலங்கு இனப்பெருக்கத் திட்டம் ஒன்றின்கீழ் பிறந்திருக்கும் ஐந்தாவது காண்டாமிருகக் குட்டி அது என்று இந்தோனீசியச் சுற்றுப்புற, வனத்துறை அமைச்சர் சிட்டி நூர்பாயா பகார், அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

முன்னதாக செப்டம்பர் மாதத்தில் மற்றொரு சுமத்ரா காண்டாமிருகக் குட்டி அங்குப் பிறந்தது. இப்போது அங்கு மொத்தம் 10 காண்டாமிருகங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்
வனவிலங்கு