நான்கு நாள் வேலை வாரம்; அமல்படுத்திய இந்தோனீசிய அமைச்சு

1 mins read
c0001fa9-6e4e-4a47-87b3-d25b7bc0b8b9
40 மணிநேர வேலை நேர வரம்பை ஊழியர்கள் பூர்த்தி செய்யாவிடில், அவர்கள் வழக்கத்தில் இருக்கும் ஐந்து நாள் வேலை அட்டவணையைத் தொடர வேண்டும். - படம்: ஐஸ்டாக்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அரசாங்கத்துக்குச் சொந்தமான வணிகத்துறை அமைச்சு, அதன் ஊழியர்களின் நலனை மேம்படுத்த நான்கு நாள் வேலை வாரங்களைச் சோதித்துப் பார்க்கும் திட்டம் ஒன்றை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

இத்திட்டத்திற்கு ஊழியர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்ததையடுத்து, ஆர்வமுள்ள பணியாளர்களுக்கான நான்கு நாள் வேலை வாரத் திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

சுருக்கப்பட்ட வேலை அட்டவணை என அறியப்படும் இத்திட்டம், 40 மணி நேர வேலைத் தேவையைப் பூர்த்தி செய்யும் அமைச்சின் ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள்கள் வேலை செய்வதற்கான அனுமதியை அளிக்கிறது.

மாதத்திற்கு இருமுறை இந்த நான்கு வேலை நாள் கொண்ட வாரத் திட்டத்திற்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது குறித்த விவரங்களை இந்தோனீசிய அமைச்சு வெளியிடவில்லை.

40 மணிநேர வேலை நேர வரம்பை ஊழியர்கள் பூர்த்தி செய்யாவிடில், அவர்கள் வழக்கத்தில் இருக்கும் ஐந்து நாள் வேலை அட்டவணையைத் தொடர வேண்டும்.

தற்போது, ​​இந்த முன்னோடித் திட்டம் இந்தோனீசியாவின் அரசாங்கத்துக்குச் சொந்தமான வணிகத்துறை அமைச்சு ஊழியர்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்