ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அனாக் கிரக்கத்தாவ் எரிமலை குமுறலில் காணாமற்போன எட்டுப் பேரைத் தேடும் பணியில் அந்நாட்டின் மீட்புக் குழுக்கள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) ஈடுபட்டன.
காணாமற்போனவர்களில் செய்தி வெளியிடச் சென்ற செய்தியாளர்கள் ஐவரும் அடங்குவர். இந்தோனீசிய தேசிய மீட்பு அமைப்பு இத்தகவல்களைத் தெரிவித்தது.
அந்தச் செய்தியாளர்க் குழு தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து திங்கட்கிழமை (செப்டம்பர் 7) ஒரு படகில் புறப்பட்டதாக அமைப்பு தெரிவித்தது. அவர்கள் இன்னும் திரும்பவில்லை என்றும் அந்தப் படகின் உரிமையாளருக்கு அவர்களிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லை என்றும் அமைப்பு குறிப்பிட்டது.
அந்த இந்தோனீசியச் செய்தியாளர்கள் ஐவரும் எரிமலை குமுறலைப் படமெடுக்க அப்பகுதிக்குச் சென்றனர்.


