வரிவிதிப்பு, சில்லு உற்பத்தி; முதலீட்டாளர்கள் கவலை

1 mins read
7a831d24-763a-41c2-bf80-5222c998fff8
வரிவிதிப்பில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடர்ந்து கவனம் செலுத்துவது குறித்து முதலீட்டாளர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது, வரி குறைப்பில் கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

இது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலைத் தந்தது.

இருப்பினும், வரிவிதிப்பில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து கவனம் செலுத்துவது குறித்து அவர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பகுதிமின்கடத்தி சில்லு உற்பத்தி மானியத்தை ரத்து செய்ய அவர் முன்வைத்துள்ள பரிந்துரை கவலை அளிப்பதாக முதலீட்டாளர்கள் கூறினர்.

2017ஆம் ஆண்டில் தாம் நடைமுறைப்படுத்திய வரி குறைப்பை மார்ச் 4 வரை நீட்டிக்கும்படி நாடாளுமன்றத்தை அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.

இருப்பினும், மற்ற நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் எடுத்துள்ள இந்த முடிவு, பங்குச் சந்தைகளைப் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்