ஈரான்: இஸ்ரேல், அமெரிக்கா சார்பில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக ஆடவர் மூவருக்கு மரண தண்டனையை ஈரான் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) நிறைவேற்றியது.
இவ்வாண்டு ஜனவரியில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயுதமேந்திய வன்முறையிலும் ஈடுபட்டிருந்த குற்றத்தை அவர்கள் எதிர்கொண்டனர்.
ஜனவரி மாத ஆர்ப்பாட்டங்களை முன்னிட்டு அண்மை மாதங்களில் ஈரான் மரண தண்டனைகளை நிறைவேற்றியது. அவர்களில் சிலர் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், ஹசான் டையோபென்ட், ஹமித் கசேமி, ரிசா சங்கானே ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர்கள், துப்பாக்கிகள், கையெறிக் குண்டுகள், பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தியதுடன் பொதுச் சொத்துகளுக்குத் தீ வைத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
மேலும், காராஜ் நகரில் மின் துணை நிலையத்தை ஆடவர்கள் சேதப்படுத்தியதில் ஒருசில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியது, வன்முறையைத் தூண்டியது போன்றவை விசாரணையின் மூலம் தெரியவந்ததை அடுத்து சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட டையோபென்ட், ஜனவரி 11ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
டையபோன்டின்கீழ் வன்முறையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பத்து பேரும் பின்னர் கைதாகினர்.
