அமெரிக்கத் தடைகளை அனுபவத்தால் சமாளிக்கும் ஈரான்

அமெரிக்கத் தடைகளை அனுபவத்தால் சமாளிக்கும் ஈரான்

1 mins read
தொழில்நுட்பத் திறனும், நல்லனுபவமும் உள்ள எங்களுக்குக் கவலை இல்லை: ஈரானிய வர்த்தகத் சங்க அதிகாரி
14290844-b260-47c3-ab5a-7fffb1239359
அமெரிக்கத் தடைகளை சிலகாலம் சமாளிப்போம் என்று ஈரானிய அதிகாரிகள் தைரியமாகச் சொல்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

தெஹ்ரான்: அமெரிக்க கடற்படை ஹோர்முஸ் நீரிணையில் தடைகள் ஏற்படுத்தியதால் ஈரானின் எண்ணெய் வர்த்தகம், ஏற்றுமதிகள் போன்றவை பாதிப்படைந்தாலும், அதனை அந்நாடு சமாளித்து வருவதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கையிருப்பில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் அப்படியே கிடப்பில் உள்ளதால் அதன் உற்பத்திக்கான கட்டுப்பாடுகளை ஈரான் மேற்கொண்டு வருகிறது. ஆயினும் ஈரானின் மீள்தன்மைக்கென ஒரு முக்கிய தற்காப்பு அம்சம் உள்ளதை அமெரிக்கா மறந்துவிடும் வாய்ப்பும் உள்ளது. அதுதான் நெடுங்காலமாக ஈரான் இவைபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளித்து வந்துள்ள அனுபவம் ஆகும்.

உலக அளவில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியதோடு, இழுபறியாக உள்ள மத்திய கிழக்குப் போரில் ஈரானின் எண்ணெய் வர்த்தகப் பொருளியலை குறிவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டை அடிபணிய வைக்க முயல்கிறார்.

ஈரான் அதன்பங்குக்கு, போரை நீட்டித்து, அமெரிக்கத் தடைகளைச் சமாளித்து வருகிறது. அதனால் அமெரிக்காவுக்கு அழுத்தம் ஏற்படுத்தி நான்கு ஆண்டுகளில் காணப்படாத எண்ணெய் விலை ஏற்றத்தை உருவாக்கிவிட்டது ஈரான்.

பல ஆண்டுகளாக அனைத்துலகத் தடைகளை எதிர்கொண்ட ஈரானிய அதிகாரிகளுக்கும் தொழில்நுட்ப பொறியாளர்களுக்கும் நெருக்கடியை சமாளிக்கும் தைரியமும் அனுபவமும் நிறைந்துள்ளது.

“எங்களிடம் தொழில்நுட்பத் திறனும், நல்லனுபவமும் தேவையான அளவு உள்ளது. எனவே எங்களுக்குக் கவலை இல்லை,” என்று ஈரானிய எண்ணெய், எரிவாயு, வேதிப்பொருள் ஏற்றுமதி சங்கத்தின் ஹமிட் ஹொசைனி உறுதியாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்