ஈரானிய அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து ரகசியமாகப் பறந்த டிரம்ப்

ஈரானிய அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து ரகசியமாகப் பறந்த டிரம்ப்

Getty Images via AFP

11 Aug 2026 - 12:10 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜூலை மாதம் துருக்கியிலிருந்து ரகசிய ராணுவ விமானம் மூலம் பறந்துசென்றதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் தரப்பிலிருந்து அவருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததே அதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

அதிபர் டிரம்ப் பயணம் செய்த விமானம் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனது அடையாள சமிக்ஞைகளை அணைத்துவிட்டுப் பறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது திரு டிரம்ப்மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனையடுத்து, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமுறை வலுப்படுத்தப்பட்டன.

அதிபர் டிரம்ப் வழக்கமாகப் பயன்படுத்தும் சிறப்பு விமானத்தைத் தவிர்த்து, பழைய ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தின்மூலம் மிகவும் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டார். அவரது பயணப் பாதை, புறப்பட்ட நேரம் உள்ளிட்ட பயண விவரங்கள் எதுவும் வெளியே கசியாதவாறு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் குறித்துத் கருத்துத் தெரிவிக்க திரு டிரம்ப்பின் பேச்சாளர்கள் பாதுகாப்பு அதிகாரிகளும் மறுத்துவிட்டனர். எனினும், அதிபர் டிரப்பிற்கு நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்துத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காதுருக்கிடோனல்ட் டிரம்ப்விமானம்ஈரான்அச்சுறுத்தல்