புத்ராஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஊழலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 15 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடு விசாரணை மட்டுமே நிறைவுபெற்றிருப்பதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட 170 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பொருள்களை ஆராய கூடுதல் நேரம் எடுக்கும் என்றார் அவர்.
இன்னும் இரண்டு வாரங்களில் இஸ்மாயில் சப்ரியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று திரு அசாம் பாக்கி கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை வாங்க அவருக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை இஸ்மாயில் சப்ரி கூற வேண்டும் என்றார் அவர்.
அதன் பிறகு அவர் சொல்வது உண்மைதானா என்பதை உறுதி செய்ய எங்களுக்கும் கால அவகாசம் தேவைப்படும் என்று திரு அசாம் பாக்கி கூறினார்.