பிரிட்டி‌ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்துவைத்த இஸ்ரேல்

1 mins read
e51b2a30-b6da-484d-960e-95f744137cab
இஸ்ரேலுடன் தடுத்துவைக்கப்பட்ட பிரிட்டி‌ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பேசிவரும் பிரிட்டி‌ஷ் வெளியுவு அமைச்சர் டேவிட் லேமி. - படம்: இபிஏ

ஜெருசலம்: இஸ்ரேல் பிரிட்டி‌ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரைத் தடுத்து வைத்துள்ளதாக பிரிட்டி‌ஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி கூறியுள்ளார். நாடாளுமன்றப் பேராளர் குழுவுடன் வந்த அந்த உறுப்பினர்களை நாட்டுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

தடுத்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த யுவன் யுவாங், அப்டிஸாம் என்று இஸ்ரேலியக் குடிநுழைவு அமைச்சு தெரிவித்ததாக ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அவர்கள் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளை ஆவணப்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைப் பரப்ப திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இஸ்ரேலுக்கு நுழைய அவர்களுக்கு அனுமதி மறுப்பட்டதாகக் கூறப்பட்டது.

திரு. யாங்கும் திரு முகமதும் லூட்டானிலிருந்து ஏப்ரல் 5ஆம் தேதி இஸ்ரேல் சென்றதாக ஸ்கை நியூஸ் சொன்னது.

பிரிட்டி‌ஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நடத்துவதற்கான முறை இது அல்ல என்று இஸ்ரேலிய அரசாங்கத்திடம் கூறியிருப்பதாகவும் தடுத்து வைக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்க அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பிரிட்டி‌ஷ் அமைச்சர் லாமி சொன்னார்.

காஸாவில் சண்டைநிறுத்த உடன்பாட்டையும் பேச்சுவார்த்தையையும் உறுதிசெய்வதோடு பிணையாளிகளை விடுவிப்பதிலும் போரை நிறுத்துவதிலும் பிரிட்டி‌ஷ் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்