தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென் காஸாவில் இஸ்‌ரேல் அறிவித்த வெளியேற்ற உத்தரவு; 16 பாலஸ்தீனர்கள் மரணம்

2 mins read
bfd0dabb-fc2f-4aa0-aedc-223f26b75747
இஸ்‌ரேலியத் தாக்குதலில் தனது உறவினர் கொல்லப்பட்ட செய்தியறிந்த மாது ஒருவர் அழுகிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ/ஜெருசலம்: தென் காஸாவில் உள்ள சில அக்கம்பக்கப் பகுதிகளுக்கு இஸ்‌ரேல் அறிவித்த வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு இஸ்‌ரேலியப் படைகள் கான் யூனிஸ் நகரின் கிழக்குக் பகுதியில் நடத்திய தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்று காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

அல்-மவாசி மனிதாபிமான மண்டலத்தின் எல்லைகளை மாற்றியமைக்கும் முயற்சியாக போர் நடைபெறும் பகுதிகளிலிருந்து சில அக்கம்பக்கப் பகுதி மக்களை வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

கான் யூனிஸ் நகரின் கிழக்குக் பகுதியில் உள்ள பானி சுஹைலா எனும் இடத்தில் இஸ்‌ரேலிய கவச வாகனங்கள் குண்டு மழை பொழிந்தன. ஆகாய மார்க்கமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாலஸ்தீனச் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

வெளியேற்ற உத்தரவில் சுகாதார அமைப்புகள் இடம்பெறவில்லை என்று பாலஸ்தீனர்கள் குறைபட்டுக் கொண்டனர்.

காஸாவில் பாதுகாப்பான ஓர் இடம் கூட இல்லை என்று பாலஸ்தீனர்கள், ஐக்கிய நாட்டு நிறுவனம், அனைத்துலக நிவாரண அமைப்புகள் ஆகியவை கூறியுள்ளன. ஜூலை மாத முற்பகுதியில், அல்-மவாசி மனிதாபிமான மண்டலமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதல்கள் ஆயுதமேந்திய போராளிகளான ஹமாஸ் ராணுவத் தலைவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன என்று இஸ்‌ரேல் கூறினாலும் அது முற்றிலும் பொய் என்றும் தாக்குதல்களை நியாயப்படுத்தவே இஸ்‌ரேல் அவ்வாறு சொல்கிறது என்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக என்றும் ராய்ட்டர் செய்தி கூறுகிறது.

அதிபர் தேர்தல் பரபரப்புக்கிடையே நெட்டன்யாகுவின் வாஷிங்டன் பயணம்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் யார் என்ற பரபரப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் வாஷிங்டன் பயணம் இடம்பெறுகிறது.

சாதனை அளவாக தொடர்ந்து ஆறாவது முறையாக இஸ்‌ரேலின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டின் மிக நெருக்கமான நாட்டுக்கு நெட்டன்யாகு மேற்கொள்ளும் பயணத்தின் முக்கியத்துவத்தை விட, அதிபர் ஜோ பைடன், அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிபர் பைடன் கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமாகி விட்டால், செவ்வாய்க்கிழமையன்று நெட்டன்யாகுவை அவர் சந்திப்பார். மேலும் இஸ்‌ரேலியப் பிரதமர் புதன்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முக்கிய உரையாற்றவிருக்கிறார்.

காஸா போர் ஒரு பரவலான வட்டார போராகப் பரவும் அபாயம் மத்திய கிழக்கில் அதிகரித்துள்ளது. அந்தக் கொந்தளிப்பான சூழ்நிலைக்கு, இஸ்ரேல் கூறும் கருத்துகளை மையமாகக் கொண்டு அவரது நாடாளுமன்ற உரை கவனம் செலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்