ஜெருசலம்: போர்நிறுத்தத்தை உள்ளடக்கிய உடன்பாடு ஒன்றுக்கு இஸ்ரேல் தயாராக இருந்தது என்பதை பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மறைமுகமாகத் தெரிவித்து உள்ளார்.
அது தொடர்பாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 18) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
டோஹாவில் உள்ள பேச்சுவார்த்தைக் குழு உடன்பாட்டின் அம்சங்களை நிறைவேற்ற இந்தத் தருணத்திலும் பணியாற்றி வருகிறது.
சண்டை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக வரையப்பட்டு உள்ள உடன்பாட்டில் எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், ஹமாஸ் பயங்கரவாதிகளை வெளியேற்றி ஹமாசை ஆயுதமற்ற பகுதியாக மாற்றுதல் போன்ற அம்சங்களும் இடம்பெற்று உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.