பெய்ரூட்: தெற்கு லெபனானில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 26) இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது ஐவர் காயமடைந்ததாக லெபனான் ஊடகங்களும் பாதுகாப்புப் படைகளும் தெரிவித்துள்ளன.
அப்பகுதியிலிருந்து தனது படைகளை மீட்டுக்கொள்வதற்கான கால அவகாசத்தைத் தாண்டிய பிறகு இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் வழிநடத்தலில் வரையப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் ஞாயிற்றுக்கிழயோடு நிறைவடைந்த பிறகும் துருப்புகளை நிறுத்தி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல், வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 24) தெரிவித்தது.
இதற்கிடையே, வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வட காஸாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான முக்கிய சாலை ஒன்றை இஸ்ரேல் மூறியதாக பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டுவதைத் தொடர்ந்து அவ்வாறு நிகழ்ந்தது.

