காஸா அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் தாக்குதல்; பலர் உயிரிழப்பு

காஸா அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் தாக்குதல்; பலர் உயிரிழப்பு

1 mins read
d2fc9e35-1a2a-49bc-86df-22a34058f91d
குறைந்தது 20 கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் ஏறத்தாழ ஒன்பது மீட்டர் ஆழமுள்ள பள்ளங்களை ஏவுகணைகள் ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் கூறினர். - படம்: இபிஏ

கெய்ரோ: காஸாவின் தென்பகுதியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் மாண்டதாக காஸா சிவில் அவசரநிலை சேவை தெரிவித்தது.

இத்தாக்குதல் செப்டம்பர் 10ஆம் தேதி காலை நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அகதிகளைக் குறிவைக்கவில்லை என்றும் ஹமாஸ் தளபத்தியத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

அல் மவாசி பகுதியில் உள்ள அந்த முகாம் மீது குறைந்தது நான்கு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாகக் குடியிருப்பாளர்களும் மருத்துவ உதவியாளர்களும் கூறினர்.

காஸா போர் காரணமாக தங்கள் அன்புக்குரியவர்கள், உடைமைகளை இழந்து தவிக்கும் பாலஸ்தீனர்கள் பலர் அந்த முகாமில் இருந்தனர்.

குறைந்தது 20 கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் ஏறத்தாழ ஒன்பது மீட்டர் ஆழமுள்ள பள்ளங்களை ஏவுகணைகள் ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தாக்குதலில் மாண்டோர், காயமடைந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 65 என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.

மாண்டோர் எண்ணிக்கை குறித்த துல்லியமான தரவுகளை காஸா சுகாதார அமைச்சு உடனடியாக வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்