இணையத் தாக்குதலால் ஜப்பான் ஏர்லைன்ஸ் பாதிப்பு

1 mins read
4e9cf806-3efa-446b-b5ba-e90f8a3e707b
ஜப்பானிய நேரப்படி காலை 7.24 மணி அளவில் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் டிசம்பர் 26ஆம் தேதியன்று இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக அதன் சில உள்ளூர், அனைத்துலக விமானச் சேவைகள் தாமதமடைந்தன.

ஜப்பானிய நேரப்படி காலை 7.24 மணி அளவில் பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

பிரச்சினைக்கான காரணம் காலை 8.56 மணிக்குள் கண்டுபிடிக்கப்பட்டதாக அது கூறியது.

பிரச்சினைகளை ஏற்படுத்திய ‘ரவுட்டர்’ ஒன்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் டிசம்பர் 26ஆம் தேதி புறப்பட இருந்த விமானங்களுக்கான பயணச்சீட்டு விற்பனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

24 உள்ளூர்ப் பயணங்கள் தாமதமடைந்ததாக ஜப்பான் ஏர்லைன்ஸ் கூறியது.

பிரச்சினைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அது சரிசெய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் கூறியது.

நிலைமை கண்காணிப்படுவதாக அது தெரிவித்தது.

பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்