கோபே: ஜப்பானின் ஹியோகோ மாநிலத்தில் பணி நேரத்தின்போது இணைய விளையாட்டில் விளையாடியதற்காகக் காவல்துறை அதிகாரி ஒருவரின் சம்பளம் குறைக்கப்பட்டதோடு அவருக்குக் கீழுள்ள ஏழு அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை (மே 16) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏழு அதிகாரிகளுடன் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு இணைய விளையாட்டுகளை விளையாடிய 38 வயது அதிகாரியின் சம்பளத்திலிருந்து 10 விழுக்காடு குறைக்கப்பட்டது. அவருக்குக்கீழ் உள்ள ஏழு அதிகாரிகளும் 21 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கடந்த அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை அந்த எட்டு அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் திறன்பேசிகள் மூலம் இணைய விளையாட்டுகளை ஒரே நேரத்தில் விளையாடினர். அதில் அவர்கள் குழுக்களை அமைத்து ஒருவருடன் ஒருவர் போட்டிபோட்டனர்.
ஒவ்வொரு முறையும் அந்த அதிகாரிகள் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு இணைய விளையாட்டில் ஈடுபட்டனர். சிலர் 10 முறை அந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
கோபன் என்ற வட்டாரத்தில் உள்ள அக்கம்பக்க காவல் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளில் விளையாட்டுகளில் மூழ்கினர்.
சில சமயங்களில் கண்காணிப்புப் பணிகளில் இருந்தபோதும் அதிகாரிகள் விளையாடியதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
புகார் அளிக்கப்பட்டபோது எல்லாம் அதிகாரிகள் இணய விளையாட்டை நிறுத்தியதால் அவர்களின் பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அது சுட்டியது.
நவம்பர் மாதம் காவல்துறைக்கு வந்த பெயர் குறிப்பிடாத கடிதம் மூலம் அதிகாரிகள் செயல் அம்பலமானது.
தொடர்புடைய செய்திகள்
எட்டுப் பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களில் ஆக மூத்த அதிகாரி, தமக்குக்கீழ் உள்ள அதிகாரிகளைப் பணி நேரத்தின்போது இணைய விளையாட்டுகளில் ஈடுபடுத்தியதாகச் சொன்னார்.

