சர்சைக்குரிய நினைவிடத்தில் ஜப்பான் அமைச்சர்: சீனா, தென்கொரியா கடும் எதிர்ப்பு

2ஆம் உலகப் போர் நிறைவு நாள்

சர்சைக்குரிய நினைவிடத்தில் ஜப்பான் அமைச்சர்: சீனா, தென்கொரியா கடும் எதிர்ப்பு

2 mins read
5f316877-df63-40ef-bc28-74b513f99884
இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்றதன் 81ஆம் ஆண்டை முன்னிட்டு , தோக்கியோவில் உள்ள யசுகுனி நினைவிடத்திற்கு நேரில் சென்று போரில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் தற்காப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி மரியாதை செலுத்தினார். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

தோக்கியோ: இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் நிறைவு தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, போரில் உயிரிழந்தவர்களைக் கௌரவிக்கும் தலைநகர் தோக்கியோவில் உள்ள சர்ச்சைக்குரிய யசுகுனி நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதேவேளையில், தூதரகச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, ஜப்பான் பிரதமர் இந்த நினைவிடத்திற்கு நேரில் செல்வதைத் தவிர்த்து, தனது சொந்தச் செலவில் வழிபாட்டுக் காணிக்கையை மட்டும் அனுப்பி வைத்துள்ளார்.

சர்ச்சையின் பின்னணி

யசுகுனி நினைவிடம் இரண்டாம் உலகப் போர், மேலும் அதற்கு முந்தைய போர்களில் உயிரிழந்த சுமார் 25 லட்சம் ஜப்பானிய வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.

இருப்பினும், இரண்டாம் உலகப் போரின் போது கடுமையான போர்க் குற்றங்களுக்காகக் தண்டிக்கப்பட்ட 14 முக்கிய ராணுவத் தலைவர்களின் நினைவிடங்களும் இங்கு அமைந்திருப்பதால், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் இந்த இடத்தைக் கடுமையான வரலாற்றுப் பிழையாகவும், ஜப்பானின் கடந்த கால ராணுவ ஆதிக்கத்தின் அடையாளமாகவும் பார்க்கின்றன.

தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கொய்சுமி இந்த நினைவிடத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இவரின் இந்த நடவடிக்கை சீனா தென்கொரியாவின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இருநாட்டு  உறவுகளில் தாக்கம்

பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு முன் இந்த நினைவிடத்திற்குத் தவறாமல் சென்று வந்த தற்போதைய ஜப்பான் பிரதமர் சானே தக்காய்ச்சி, ஆசிய நாடுகளுடனான தூதரக உறவுகளில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பிரதமர் என்ற முறையில் இம்முறை நேரில் செல்வதைத் தவிர்த்துள்ளார்.

அதேவேளை, “போரில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை என்றென்றும் மதிப்போம்; அமைதியைப் பேண உறுதியேற்கிறோம்” என்று தற்காப்பு அமைச்சர் கொய்சுமி குறிப்பிட்டுள்ளார். 

குறிப்புச் சொற்கள்