ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உள்ள இரண்டாம் இணைப்பில் சுல்தான் அபு பக்கர் வளாகத்தில் மலேசியக் குடிநுழைவைத் கடந்துசெல்ல சில மோட்டார்சைக்கிளோட்டிகளும் பேருந்துப் பயணிகளும் புதிய கியூஆர் குறியீட்டு குடிநுழைவு முறையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மின் நுழைவாயில்கள், ‘எம்பைக்’ ஆகியவை செயல்பாட்டில் இருந்தாலும், பெரும்பாலான பேருந்துப் பயணிகள் புதிய முறைக்காக ஒதுக்கப்பட்ட தடங்களைப் பயன்படுத்த விரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோட்டார்சைக்கிள் தடங்களில், புதிய முறை மூலம் குடிநுழைவைக் கடந்துசெல்லும் நடைமுறை சுமுகமாக இருந்தது.
உணர்கருவிகளில் மட்டும் சில சிறிய பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

