ஜோகூர் பாரு சவுத்கீ கொலை: சிங்கப்பூர் உதவியுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை: சிங்கப்பூர் உதவியுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

1 mins read
1385ef72-6b07-4053-8ad9-17978a6b890e
மார்ச் 14ஆம் தேதி, அதிகாலை 5 மணியளவில் கூர்மையான ஆயுதத்தால் 32 வயது ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டார். - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: ஜோகூரின் சவுத்கீ வர்த்தகப் பகுதியில் கடந்த வாரம் நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து வெளிநாட்டினரை அவ்வட்டாரக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மார்ச் 14ஆம் தேதி, அதிகாலை 5 மணியளவில் கூர்மையான ஆயுதத்தால் 32 வயது ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டார்.

கழுத்தில் ஏற்பட்ட ஆழமானக் காயத்தால் அந்த நபர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அக்கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண அம்மாநிலக் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டதாகக் ஜோகூர் காவல்துறைத் தலைவர் அப் ரகுமான் அர்சாத் தெரிவித்தார்.

மார்ச் 19ஆம் தேதி பின்னிரவு 12:15 மணியளவில் சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர் சிங்கப்பூருக்குள் நுழைவதற்காகக் குடிநுழைவுச் சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வெளியிட்ட அறிக்கையில் திரு ரகுமான் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், எஞ்சிய நான்கு சந்தேக நபர்களும் அன்றைய தினம் மாலை 6 மணியளவில் சிங்கப்பூர் காவல்துறையின் உதவியுடன் சிங்கப்பூரில் பிடிபட்டனர் என்றார் அவர்.

ஜோகூரில் பிடிபட்ட முதல் சந்தேக நபர் மார்ச் 24ஆம் தேதி வரையும் சிங்கப்பூரில் கைதான நால்வரும் மார்ச் 26 தேதி வரையும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் திரு ரகுமான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருசிங்கப்பூர்கொலைகைது