அரசாங்கம் மாநில சுகாதாரத் துறை, ஜோகூர் பாரு நகர மன்றத்துடன் ஒருங்கிணைந்து நடத்திய நடவடிக்கை

ஜோகூர் 2,000 மின்சிகரெட் உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளது

2 mins read
01ab8640-e45c-4ed7-9754-d4bf5e7869c1
ஜோகூர் மாநில சுகாதார சுற்றுபுற நிர்வாகக் குழுவின் தலைவர் லிங் டியான் சூன் - படம்: ஆசூன் என்பவரின் ஃபேஸ்புக்

ஜோகூர் பாரு: கேஎஸ்எல் சிட்டி மால் (KSL City Mall) வளாகத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடந்த ஒருங்கிணைந்த மாநில அரசாங்க அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 1,997 மின்சிகரெட் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெர்னாமா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றில் பல சுவைகள், வகைகள், வடிவங்கள் உள்ளடங்கும்.

ஜோகூர் சுகாதார, சுற்றுப்புற நிர்வாகக் குழுவின் தலைவர் லிங் டியான் சூன் இதனை தெரிவித்தார். மாநில சுகாதாரத் துறை (JKN), ஜோகூர் பாரு வட்டார சுகாதார அதிகாரி டாக்டர் ஹைதர் ரிசால் தோஹா தலைமையில் ஜோகூர் பாரு நகர மன்றம் (MBJB), ஜேகெஎன் (JKN) ஆய்வாளரும் சட்டப் பிரிவுத் தலைவருமான கைய்ருல் ஹிடாயா மன்சூர் வழிநடத்த இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

புகைப்பிடிக்கும் பொருள்களுக்கான கட்டுப்பாட்டுப் பொதுச் சுகாதார சட்டம் 2024ன் படியும், உரிமங்கள், வர்த்தகம், தொழில்துறை துணைச் சட்டங்கள் (MBJB) 2016ன் படியும், உள்ளுர் அரசாங்கச் சட்டத்தின் படியும் ஜோகூரில் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று திரு லிங் டியான் சூன் அறிவித்தார்.

நடவடிக்கைகளைத் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பொருள்களுக்கான கட்டுப்பாட்டுப் பொது சுகாதாரச் சட்டம் 2024ன் பிரிவு 10 (1)ன் கீழ் எட்டு விசாரணை அறிக்கைகளும் பிரிவு 7 (1)ன் கீழ் இரண்டு விசாரணை அறிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன எனவும் அவர் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார். ஆகவே மொத்தம் 10 விசாரணைகள் மின்சிகரெட் பயன்பாட்டுக்கு எதிராக நடைபெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்