ஜோகூர் பாரு: மலேசியப் போக்குவரத்து அமைச்சில் மாற்றங்கள் இடம்பெற்றாலும் திட்டமிட்டபடி வரும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆர்டிஎஸ் ரயில் சேவையைத் தொடங்கும் பணிகளை ஜோகூர் தொடர்ந்து எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் பதவி விலகியதைத் தொடர்ந்து இத்தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்டிஎஸ் திறப்பை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் ஜோகூர் மாநில அரசாங்கம் ரயில் சேவையைச் சோதனையிட்டுப் பார்க்கும் என்று மாநிலப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுத் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சோலே தெரிவித்தார். மேலும், எஸ்பிஎஸ்டி எனும் திட்டத்தின்கீழ் ஜோகூர் மாநிலம் கூடுதல் பேருந்துகளைப் பெறுவதற்குக் காத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
