ஜோகூர் மாணவி கொலை: ஊகங்கள் பரப்ப வேண்டாம் எனத் தந்தை வேண்டுகோள்

ஜோகூர் மாணவி கொலை: ஊகங்கள் பரப்ப வேண்டாம் எனத் தந்தை வேண்டுகோள்

படம்: ஏசியா நியூஸ் நெட்வொர்க்

05 Oct 2026 - 11:33 am

1 mins read

கோலாலம்பூர்: ஜோகூரில் இருக்கும் யோங் பெங் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 16 வயது மாணவி ஐரீன் சோஃபியா முகமது கைருல் ஃபைசல் சடலமாக அக்டோபர் 3ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டார்.

தமது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என அம்மாணவியின் தந்தை கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 4ஆம் நடைபெற்ற அம்மாணவியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரின் தந்தை முகமது கைரூல் ஃபைசல் கியார், தமது மகளின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வீண் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, பத்து பகாட்டில் உள்ள சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிவடைந்ததும், அம்மாணவியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவியின் தலை, உடற்பகுதியில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் ஜோகூர் மாநிலக் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

மாணவியின் மரணம் தொடர்பாக யோங் பெங் பகுதியைச் சேர்ந்த 16 வயது பதின்ம வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 9ஆம் தேதி வரை ஆறு நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர்தந்தைமாணவிகொலை