அமெரிக்காவுடன் கூட்டுப் பயிற்சி: தொலைதூர ஏவுகணையைப் பயன்படுத்திய ஜப்பான்

அமெரிக்காவுடன் கூட்டுப் பயிற்சி: தொலைதூர ஏவுகணையைப் பயன்படுத்திய ஜப்பான்

படம்: அன்ஸ்பிளேஷ்

26 Oct 2026 - 6:52 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பான்-அமெரிக்கக் கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் தற்காப்பு அமைச்சு முதன்முறையாக ஏய்தபின் இலக்கை மாற்றி அமைக்கக்கூடிய ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளது.

அந்தத் தொலைதூர ‘டைப்-25’ (Type-25) ரக ஏவுகணை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற போர்ப் பாவனைப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டது.

வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏவுதளத்திலிருந்து பாய்ச்சப்படும் வகையில் உள்நாட்டிலேயே அந்த ‘டைப்-25’ ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 1,000 கிலோமீட்டர் தொலைவு பாயும் திறன் கொண்ட அந்த ஏவுகணை, சீனப் பெருநிலத்தின் சில கடலோரப் பகுதிகளைத் தாக்கும் எல்லைக்குள் கொண்டு வருவதால், அது ஒரு பதில்தாக்குதல் ஆயுதமாகக் கருதப்படுகிறது.

நாகாசாக்கி, சாகா மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒனோஹரா பயிற்சிப் பகுதியில், ஜப்பான் தற்காப்புப் படை உறுப்பினர்கள் அந்த ஏவுகணையை அதன் ஏவுதளத்திற்குக் கொண்டுசென்று, தென்மேற்குத் திசையை நோக்கி நிறுத்தியதைக் காண முடிந்தது.

‘கீன் ஸ்வார்ட்’ எனும் அக்கூட்டுப் பயிற்சியில், கிட்டத்தட்ட 45,000 ஜப்பான் தற்காப்புப் படை வீரர்களும் 12,000 அமெரிக்கப் படையினரும் பங்கேற்றனர்.

அப்பயிற்சி, அக்டோபர் 19ஆம் தேதி ஜப்பான் முழுவதும் தொடங்கி அக்டோபர் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலியா உட்பட மேலும் ஏழு நாடுகள் அப்பயிற்சியில் இணைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்ஏவுகணைஅமெரிக்கா