ஆகஸ்ட் 29ல் கமலா ஹாரிஸின் முதல் நேர்காணல்

1 mins read
e2693cbb-9339-47e0-905a-c7b22169a862
ஒரு வேட்பாளராக திருவாட்டி ஹாரிஸ் இன்னும் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. - கோப்புப் படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஆகஸ்ட் 29ஆம் தேதி சிஎன்என் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்கிறார்.

அதிபர் ஜோ பைடனுக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனத்தைப் பெற்ற பின்னர் திருவாட்டி ஹாரிஸ் பங்கேற்கும் முதல் நேர்காணல் அது.

துணை அதிபர் வேட்பாளராக அந்தக் கட்சி சார்பில் களமிறங்கி இருக்கும் டிம் வால்ஸும் நேர்காணலில் கலந்துகொள்கிறார்.

கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு முன்னர் திரு பைடன் அதிபர் தேர்தல் களத்தில் இருந்து விலகியதில் இருந்து, துணை அதிபர் ஹாரிஸ், 59, நேர்காணல்களைத் தவிர்த்து வருவதாக குடியரசுக் கட்சியினர் மீண்டும் மீண்டும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், ஜியார்ஜியா மாநில பிரசாரத்தின்போது திருவாட்டி ஹாரிஸும் திரு டிம் வால்ஸும் ஆகஸ்ட் 29ஆம் தேதி நேர்காணலில் பங்கேற்பாளர்கள் என்றும் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் ஆகஸ்ட் 30 காலை 9 மணி) அந்த நேர்காணல் ஒளிபரப்பப்படும் என்றும் சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது.

இருப்பினும், ஒரு வேட்பாளராக திருவாட்டி ஹாரிஸ் இன்னும் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்