ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக காமெனியின் மகனுக்கு அதிக வாய்ப்பு

ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக காமெனியின் மகனுக்கு அதிக வாய்ப்பு

2 mins read
46d5de9f-e989-42d5-91a1-7e8dbe3771e2
கொல்லப்பட்ட அயத்துல்லா அல் காமெனியின் மகனான மொஜ்தபா காமெனி, 56. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

டெஹ்ரான்: ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அல் காமெனி கொல்லப்பட்டுவிட்ட நிலையில், அவருடைய மகனான மொஜ்தபா காமெனி அப்பதவியில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்த உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் இருக்கும் சமயத் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) கூடி விவாதித்தனர். அவர்களின் முதல் தெரிவு 56 வயது மொஜ்தா காமெனிதான் என்று விவரமறிந்த ஈரானிய அதிகாரிகள் மூவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“கடந்த பல ஆண்டுகளாகவே ஈரானின் அடுத்த தலைவர் மொஜ்தபாதான் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஈராண்டுகளாக அப்பதவிக்கான போட்டியில் அவரது பெயர் அதிகம் அடிபடாததுபோல் தெரிந்தது,” என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் வாலி நசீர் கூறினார்.

இந்நிலையில், ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் அவரைக் கொல்வோம் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது.

“ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைவராக நியமிக்கப்படுபவர் இஸ்ரேலின் அழிவுக்குத் திட்டமிட்டாலோ, அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்தாலோ, ஈரானிய மக்களை அடக்கி ஒடுக்கினாலோ, அவர் யாராக இருப்பினும், எங்கு ஒளிந்திருந்தாலும் குறிவைப்போம்,” என்று இஸ்ரேல் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார். அயத்துல்லா அல் காமெனி கொல்லப்பட்ட அமெரிக்க, இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா காமெனி உயிர் தப்பினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது. உயிர் தப்பியதன் மூலம், ஈரானின் எதிர்கால அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் அவர் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலி காமெனிக்குப் பிறகு ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து அறிய ஆவலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அல் காமெனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா காமெனி உயிர் தப்பினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது. உயிர் தப்பியதன் மூலம், ஈரானின் எதிர்கால அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் அவர் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிப்பார் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்