தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூயார்க்கில் கத்திக்குத்து: இருவர் மாண்டனர்; ஒருவர் கவலைக்கிடம்

1 mins read
533fabed-7f7b-410f-aa61-b187b2651cdf
நியூயார்க்கில் கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் மக்களைக் கொலை செய்யும் நோக்கில் கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் திங்கட்கிழமை (நவம்பர் 18) இரவு கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 18ஆம் தேதி காலை நடந்த இச்சம்பவத்தில் இருவர் மாண்டதாகவும் பலத்த காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அப்பகுதி மேயரும் காவல்துறையினரும் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆயுதமான ரத்தம் தோய்ந்த சமையலறையில் பயன்படுத்தப்படும் பெரிய கத்தியின் புகைப்படத்தைக் காவல்துறையினர் வெளியிட்டனர்.

கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், மூவரை ஏன் கத்தியால் குத்தினார், அதற்குப் பின்னால் இருக்கும் நோக்கம் குறித்த எந்தவொரு விவரத்தையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.

குற்றவழக்குகளில் தொடர்புடையை 51 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து இரண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்திகள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்