செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நிலச்சரிவு கண்காணிப்பு: நேப்பாளம்

1 mins read
1e8687f6-6ef4-4b18-9320-555a17cf7948
கடந்த ஆண்டு மட்டும் நிலச்சரிவுளால் 300க்கும் அதிகமானோர் பலியாயினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

காட்மாண்டு: நேப்பாளத்தில் நிலச்சரிவுகளை முன்கூட்டியே அடையாளம் காண உதவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் சோதனை செய்துவருகின்றனர்.

மழைநீரின் அளவு, நிலத்தின் அசைவுகள் குறித்த தரவுகள், உள்ளூர்க் கண்காணிப்புகள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றைக் கொண்டு பல வாரங்களுக்கு முன்னரே நிலச்சரிவுகளை முன்னுரைக்கும் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பை மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் பருவமழை காலக்கட்டத்தின்போது வெள்ளங்கள், நிலச்சரிவுகள் போன்றவற்றின் காரணமாக தேற்காசியா முழுவதும் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர்.

“மலைகள் நிறைந்த நாடாக இருப்பதால் நேப்பாளத்தில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுவது இயல்பு,” என்றார் தேசியப் பேரிடர் அபாயக் குறைப்பு, நிர்வாக ஆணைய நிபுணர் ராஜேந்திர ‌‌ஷர்மா.

பருவநிலை மாற்றமும் நிலைமையை மோசமாக்கியதாகச் சொன்ன அவர், மழையும் காட்டுத்தீயும் மண்ணரிப்பை ஏற்படுத்துகின்றன என்றார்.

கடந்த ஆண்டு மட்டும் நிலச்சரிவுகளுக்கு 300க்கும் அதிகமானோர் பலியாயினர்.

நிலச்சரிவை முன்னுரைக்கும் தளத்தை ஆஸ்திரேலியப் பேராசிரியர் அண்டொய்னெட் டோர்டெசிலஸ் நேப்பாளம், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கினார்.

“குறைந்த செலவில் அதிக பயன்மிக்க தீர்வைத் தரும் கட்டமைப்பு அறிவியல் ரீதியாக உருவாக்கப்பட்டது,” என்று பேராசிரியர் டோர்டெசிலாஸ் தெரிவித்தார்.

நேப்பாளத்தில் இரண்டு அபாயகரமான பகுதிகளில் அவை சோதிக்கப்படுகின்றன. ஒன்று நுவாகொட் வட்டாரத்தில் உள்ள கிம்டாங். மற்றொன்று டாடிங் வட்டாரத்தில் உள்ள ஜோதிநகர்.

குறிப்புச் சொற்கள்