லங்காவி தீ விபத்தில் 27 பூனைகள் பலி, மருத்துவமனையில் ஆடவர்

லங்காவி தீ விபத்தில் 27 பூனைகள் பலி, மருத்துவமனையில் ஆடவர்

1 mins read
a5590ede-6837-464e-8b26-f3fcdd7471b3
லங்காவிக்கு அருகில் உள்ள கம்போங் பாடாங் காவோங்கில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி 27 பூனைகள் உயிரிழந்தன. அவற்றின் உரிமையாளரான ஆடவருக்கு முகத்திலும் நெஞ்சிலும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தீயணைப்பு, மீட்பு நிலையம் கூறியது. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அலோர் ஸ்டார்: லங்காவிக்கு அருகே, புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) காலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆடவருக்கு முகத்திலும் மார்பில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

சம்பவத்தில் அவர் வளர்த்த 27 பூனைகள் பலியாகின.

அந்த ஆடவர் லங்காவியில் உள்ள சுல்தானா மாலிஹா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தீயணைப்பு, மீட்பு நிலையம் கூறியது.

அவரது வீட்டுக்குள் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த 30 பூனைகளில் 27 பூனைகள் தீயில் கருகி உயிரிழந்தன. மூன்று பூனைகள் மீட்கப்பட்டன என்று நிலையம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்