இந்தோனீசிய நிலச்சரிவுகளில் குறைந்தது 27 பேர் மரணம்

1 mins read
0af6f840-deeb-4085-aac5-d946a1aca9a1
நவம்பர் 27ஆம் தேதியன்று டெலி செர்டாங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் மாண்டதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் வடசுமத்திரா காவல்துறை செய்தித்தொடர்பாளர் திரு ஹாடி வாயுடி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடசுமத்திரா மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றின் காரணமாக குறைந்தது 27 பேர் மாண்டுவிட்டதாக நவம்பர் 28ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.

நிலச்சரிவு ஏற்பட்டு சிறு பேருந்து ஒன்று மண்ணில் புதையுண்டதாக அதிகாரிகள் கூறினர்.

பேருந்தில் இருந்தோரைத் தேடி மீட்கும் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரத்திலிருந்து அந்த மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

நவம்பர் 27ஆம் தேதியன்று டெலி செர்டாங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் மாண்டதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும் வடசுமத்திரா காவல்துறை செய்தித்தொடர்பாளர் திரு ஹாடி வாயுடி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த வாரயிறுதியில் மீட்புப் பணியாளர்கள் 20 சடலங்களைக் கண்டெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாயமான இருவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் காரணமாக வீடுகள், பள்ளிவாசல்கள், வயல்கள் சேதமடைந்தன.

குறிப்புச் சொற்கள்